சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களின் மீது 10 சதவீத ஒழுங்குமுறை வரியைப் பாகிஸ்தான் விதித்துள்ளது.
பாகிஸ்தான் பொருளாதாரச் சரிவில் தவித்து வரும் நிலையில் சுமார் 2.3 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியைக் கடனான வழங்கச் சீன வங்கிகள் ஒப்புக் கொண்டுள்ளன.
இந்த நிலையில் சீனா மீதே பாகிஸ்தான் அரச வரி விதித்துள்ளது.
லோன் ஆப் நிறுவனங்களின் அட்டூழியம்.. 5000 ரூபாய் கடனுக்கு 4.28 லட்சம் செலுத்தும் நிலை..!
சீனா – பாகிஸ்தான்
சீனா – பாகிஸ்தான் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் (CPFTA) கீழ் பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் சுமார் 250 பில்லியன் ரூபாய் அளவிலான பொருட்கள் பாகிஸ்தான் நாட்டிற்குள்ள கொண்டு வந்துள்ளது சீனா.
வரியில்லா இறக்குமதி
இது கடந்த ஆண்டை காட்டிலும் சீனாவின் வரியில்லா இறக்குமதியின் அளவு சுமார் 673 சதவீதம் அதிகமாகும். இதன் வாயிலாக இந்த ஆண்டுச் சீனாவின் அதிகப்படியான இறக்குமதி மூலம் 25 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் வருவாய் இழப்பை பாகிஸ்தான் எதிர்கொண்டு உள்ளது.
10 சதவீத ஒழுங்குமுறை வரி
பாகிஸ்தான் அமைச்சரவையின் பொருளாதார ஒருங்கிணைப்புக் குழுவின் (இசிசி) கூட்டத்தில் சீனாவின் பெட்ரோலியப் பொருட்களின் மீது 10 சதவீத ஒழுங்குமுறை வரியை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
இறக்குமதிக் கொள்கை
பாகிஸ்தானின் இறக்குமதிக் கொள்கையின் கீழ், உள்நாட்டுச் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பெட்ரோலியம் பொருட்களின் மீது விதிக்கப்பட்டும் 10 சதவீத டீம்ட் வரி பொருந்தும். இதேபோல் பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதியின் மீது 10 சதவீத சுங்க வரியை பெறுகின்றன.
வரி விலக்கு
இருப்பினும், 2019 இல் கையொப்பமிடப்பட்ட CPFTA, பெட்ரோலிய பொருட்கள் உட்பட இருதரப்பு வர்த்தகத்தில் ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த வரி விதிப்பு இரு தரப்புக்கு மத்தியில் புதிய பிரச்சனையை உருவாக்க வாய்ப்பு உள்ளது.
எரிபொருள் விலை
பாகிஸ்தான் அரசு சமீபத்தில் பெட்ரோலியத்தின் விலையை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய விலை உயர்வுக்குப் பிறகு, புதிய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.179.86 ஆகவும், அதிவேக டீசல் லிட்டருக்கு ரூ.174.15 ஆகவும், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.155.56 ஆகவும், லைட் டீசல் விலை லிட்டருக்கு ரூ.179.86 ஆகவும் உள்ளது.
Pakistan shocks China; 10% duty on Chinese petroleum imports
Pakistan shocks China; 10% duty on Chinese petroleum imports சீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாகிஸ்தான்.. எங்களுக்கே வரியா..?