புதுடெல்லி: கடந்த 2010- 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது ஒன்றிய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், பஞ்சாப் மாநிலம் மான்ஸா பகுதியில் மின் உற்பத்தி தொழிற்சாலை பணிகளுக்காக 263 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் தொகையை முறைகேடாக பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பத்தின் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய மனுவை நேற்று முன்தினம் டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, முன்ஜாமீன் கேட்டு கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.