சென்னையில் அரசு பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை ஆவடியில் இருந்து ஆரணி நோக்கி சென்ற அரசு பேருந்து பட்டாபிராம் தண்டுறை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது இருசக்கர வாகனம் ஒன்று முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர், கண்காணிப்பு சிசிடிவி காட்சி மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.