ஜம்முவில் உள்ள சட்வாரி காவல்நிலையத்தில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான வாகனங்கள் சேதமாகின.
சட்வாரி காவல்நிலையத்தின் அருகே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில், இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறைந்த மின்னழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.