வாட்ஸ்அப் செயலியில் உள்ள டெலிட் மெசேஜ் ஆப்ஷன் பயனர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. ஆனால், பயனர்கள் ‘Delete for everyone’ஆப்ஷன் கிளிக் செய்வதற்கு பதிலாக ‘Delete for me’ கொடுத்துவிட்டால், அதனை மீட்டெடுக்க முடியாது. இதனால், முக்கியமான மெசேஜ் அல்லது போட்டோவை பயனர்கள் மிஸ் செய்ய நேர்ந்தது.
இந்த புகாரை நீண்டு நாள்களாக ஆராய்ந்து வந்த வாட்ஸ்அப், அதற்கான தீர்வை கொண்டு வந்துள்ளது. தவறுதலாக டெலிட் செய்யப்பட்ட மெசேஜை உடனடியாக மீட்டெடுக்க undo பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது.
மெசேஜை டெலிட் செய்ததும், undo பட்டன் ஸ்கீரினின் கீழ் பகுதியில் தோன்றக்கூடும். குறிப்பிட்ட நேரம் மட்டுமே பட்டன் திரையில் தோன்றும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதற்குள் கிளிக் செய்து, டெலிட் செய்த மெசேஜை ஸ்டோர் செய்திட வேண்டும்.
அந்த ஸ்கீரின்ஷாட்டையும் WABetaInfo பகிர்ந்துள்ளது. அதனை கீழே காணலாம்.
இந்த வசதி, ஜிமெயில் undo பட்டன் போலவே செயல்படுகிறது. ஏற்கனவே, வாட்ஸ்அப் போட்டி நிறுவனமான டெலிகிராமில் undo பட்டன் வசதி உள்ளது
இதுதவிர, வாட்ஸ்அப் 2 ஜிபி பைல்ஸ் அனுப்பும் வசதியை, பல பயனர்களுக்கு வழங்கியுள்ளது. பல மாதங்களாக சோதனையில் இருந்த இந்த அப்டேட், வாட்ஸ்அப் பீட்டா 2.22.13.6 வெர்ஷனில் உலகம் முழுவதும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.