தமிழகத்தில் இன்று 107 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  05/06/2022

சென்னை

மிழகத்தில் இன்று 107 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,56,083 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 12,921 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,66,95,013 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 107 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் ஒருவர் வெளிமாநிலத்தில் இருந்தும் ஒருவர் வெளிநாட்டில் இருந்தும் வந்துள்ளனர். இதுவரை 34,55,976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று ஒருவர் கூட மரணம் அடையவில்லை.  இதுவரை 38,025 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 70 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,17,222 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 836 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,52,840 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.  இதுவரை 9,068 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 34 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,43,364 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 408 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் செங்கல்பட்டு 13 பேர் உடன் இரண்டாம் இடத்திலும் கோவை 6 பேர் உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,30,085 பேர் பாதிக்கப்பட்டு 2,617 பேர் உயிர் இழந்து 3,27,432 பேர் குணம் அடைந்து தற்போது 36 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,36,112 பேர் பாதிக்கப்பட்டு 2,658 பேர் உயிர் இழந்து 2,33,198 பேர் குணம் அடைந்து தற்போது 256 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.