தமிழகத்தில் புதிதாக பிஏ4, பிஏ5 ஆகிய 2 வைரஸ்கள் பரவியுள்ளதாக பரவத் தொடங்கியுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “புதியதாக உருமாற்றம் பெற்றுள்ள தமிழகத்தில் தென்படத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக ஒமிக்ரான் என்கிற வைரஸ், பிஏ1, பிஏ2, பிஏ3, பிஏ4, பிஏ5 என ஒரு 7 வைகளில் இருக்கிறது என்று உலகம் முழுவதும் சொல்லப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை பிஏ1, பிஏ2 என்கிற அளவில்தான் அந்த தொற்று தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில், கடந்த ஒரு 5 நாட்களுக்கு முன்னர், நாகர்கோயில் பகுதியில் இருக்கின்ற ஒருவருக்கு பிஏ4 என்கிற உருமாற்றம் பெற்ற வைரஸ் தொற்று ஏற்பட்டது. இப்போது அவர் குணமடைந்து நலமடைந்திருக்கிறார்.
இந்த நிலையில், நேற்று ஒரு 150 மாதிரிகள், ஐதராபாத்தில் இருக்கிற சிடிஎஃப்டி என்கிற ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அதில் வந்திருக்கிற பரிசோதனை முடிவுகள் தற்போது பிஏ4 வைரஸ் தமிழகத்தில் 4 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிஏ4 என்கிற உருமாற்றம் பெற்ற வைரஸ், ஒரு 8 பேருக்கு வந்திருக்கிறது. பிஏ4, பிஏ5 என்ற உருமாற்றம் பெற்ற வைரஸ்கள் தமிழகத்தில் வந்திருக்கிறது” என்று கூறினார்.
தமிழகத்தில் உருமாற்றம் பெற்ற பிஏ4, பிஏ5 ஆகிய புதிய வைரஸ் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதால், மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்துகொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“