சென்னை: தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம், கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமனம், நெல்லை மாநகர காவல் ஆணையராக அவினாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு மண்டல ஐஜியாக தேன்மொழி, சென்னை காவல் துறை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக மகேஸ்வரி, தமிழ்நாடு காவல் அகாடெமி கூடுதல் இயக்குனராக ஜெய கௌரி, மத்திய மண்டல ஐஜியாக சந்தோஷ் குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதைத்தவித்து தமிழ்நாடு முழுவதும் 7 மாவட்ட எஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரூர், திண்டுக்கல், மதுரை, திருவாரூர், ராமநாதபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை எஸ்பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் எஸ்பியாக சுந்தரவதனம், மதுரை எஸ்பியாக சிவபிரசாத், திண்டுக்கல் எஸ்பியாக பாஸ்கரன், திருவாரூர் எஸ்பியாக சுரேஷ்குமார், ராமநாதபுரம் எஸ்பியாக தங்கதுரை, திருவள்ளூர் எஸ்.பி.யாக பி.சி.கல்யாண், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.