கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 14 வயது சிறுமி ஒருவருக்கு கருகளைப்பு செய்யப்பட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியது.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் விசாரணை செய்தபோது, அந்த தகவல் உண்மைக்கு மாறானது என்பது தெரியவந்தது. மேலும் அந்த சிறுமி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றதாகவும், அவரை ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது.
இதனையடுத்து ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அந்த 14 வயது சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறித்து அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்த சிறுமி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், இதன் காரணமாக அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி அந்த வாலிபர் பலாத்காரம் செய்ததில் சிறுமி தற்போது கருவுற்றதும் தெரியவந்துள்ளது.
மேலும் சிறுமியை பலாத்காரம் செய்த அந்த வாலிபர், வழக்கு ஒன்றில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.