கனடாவில் செட்டில் ஆக வேண்டும் என கனவு கண்ட இளைஞர் ஒருவர் தனது மனைவியால் மோசடி செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் அஷூ குமார். இவருக்கு கனடா நாட்டில் வாழ வேண்டும் என்ற கனவு இருந்தது.
இந்நிலையில் கடந்த 2018 மார்ச் 24ஆம் திகதி குமாருக்கும் மஞ்சு என்ற பெண்ணிற்கும் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு முன்னர் மஞ்சு மற்றும் அவர் குடும்பத்தார் குமாரிடம் ஒரு நிபந்தனை விதித்தனர்.
அதன்படி மஞ்சு கனடா செல்வதற்கான செலவுகளை குமார் ஏற்றுக்கொண்டால், அங்கு சென்ற பின்னர் அவரை spouse visaவில் கனடாவுக்கு அழைத்து கொள்வேன் என கூறினார்.
இதை நம்பி திருமணத்திற்கு பின்னர் மஞ்சுவின் விசா கட்டணம், கல்லூரி கட்டணம் மற்றும் விமான கட்டணம் என ரூ 35 லட்சத்தை செலவு செய்து அவரை குமார் கனடா அனுப்பினார்.
அடுத்த சில மாதங்களில் மஞ்சு, குமாரிடம் போனில் பேசுவதை தவிர்த்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் போனை எடுப்பதையே நிறுத்திவிட்டார்.
இதையடுத்து மஞ்சுவின் குடும்பத்தாரை தொடர்பு கொண்ட குமார் தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்க அவர்கள் தர மறுத்துவிட்டனர்.
பின்னர் தான் முழுவதுமாக மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த குமார் கடந்தாண்டு ஜூலை மாதம் தான் இது குறித்து பொலிசில் புகார் அளித்தார்.
மாதக்கணக்கில் பொலிசார் விசாரணை நடத்திய நிலையில் தற்போது ஒருவழியாக மஞ்சு மற்றும் அவர் குடும்பத்தார் மோசடி வழக்கை பதிவு செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது.