பணவீக்கம் 2022 மேயில் மேலும் அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 ஏப்பிறலின் 29.8 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 39.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இவ்வதிகரிப்பானது உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த அதிகரிப்புக்களினால் தூண்டப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 ஏப்பிறலின் 46.6 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 57.4 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஏப்பிறலின் 22.0 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 30.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2022 மேயில் 8.34 சதவீதமாகப் பதிவாகியது. இதற்கு, முறையே 4.87 சதவீதமாகவும் 3.47 சதவீதமாகவும் காணப்பட்ட உணவல்லா மற்றும் உணவு வகைகள் இரண்டினதும் பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தது. அதற்கமைய, போக்குவரத்து (பெற்றோல், டீசல் மற்றும் பேருந்துக் கட்டணம்), வீடமைப்பு, நீர், மின்வலு, எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள் (திரவப்பெற்றோலிய வாயு மற்றும் பராமரித்தலுக்கான/ மீள்கட்டுமானத்திற்கான பொருட்கள்), உணவகம் மற்றும் விடுதிகள் அத்துடன் நானாவிதப் பொருட்கள் மற்றும் சேவைகள் (கார் காப்புறுதி) ஆகிய துணை வகைகளில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்களைப் பிரதான காரணமாகக் கொண்டு உணவல்லா வகையினுள் உள்ள பொருட்களின் விலைகள் அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன. மேலும், உணவு வகையினுள் காய்கறிகள், உடன் மீன், அரிசி, பாண், கருவாடு, பருப்பு என்பவற்றின் விலைகளில் மாதகாலப்பகுதியில் அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன.

அதேவேளை, ஆண்டுச் சராசரி பணவீக்கம் 2022 ஏப்பிறலின் 11.3 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 14.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஏப்பிறலின் 22.0 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 28.4 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம், 2022 ஏப்பிறலின் 8.1 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 10.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

முழுவடிவம்

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/press_20220531_inflation_in_may_2022_ccpi_t.pdf

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.