ஹபூர்: உத்தரப் பிரதேசத்தின் ஹபூர் மாவட்டத்தில் டோலானா பகுதியில் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்த பாய்லர் நேற்று திடீரென வெடித்து சிதறிதீ பிடித்து எரிந்தது.தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்். தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 19 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் பலத்த காயமடைந்த 15 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.