பிரபல இயக்குனர் படத்தில் இணைந்து நடிக்கும் பாவனா – கவுதம் மேனன்
மலையாளத்தில் தொண்ணூறுகளில் மோகன்லாலின் ஸ்படிகம், மம்முட்டியின் ஐயர் தி கிரேட் உள்ளிட்ட பல கமர்சியல் படங்களை இயக்கியவர் இயக்குனர் பத்ரன். கடந்த 17 வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த பத்ரன் மீண்டும் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார் படத்திற்கு யோ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிகை பாவனா, இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் இளம் நடிகர் ஷேன் நிகம் ஆகிய மூவரும் நடிக்கின்றனர். இதில் பாவனா நடிகையாகவே நடிக்கிறார் என்றும் கவுதம் மேனன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு இடைவெளிக்குப் பிறகு பாவனா மலையாளத்தில் நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.