பாரீஸ்,
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கி விட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது அரைஇறுதியில் 13 முறை சாம்பியனும், 5-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), தரவரிசையில் 3-வது இடம் வகிப்பவருமான ஒலிம்பிக் சாம்பியன் (ஜெர்மனி) அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார்.
இதில் ரபெல் நடால் 7-6 (10-8), 6-6 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ‘களிமண் தரை போட்டியின் மன்னன்’ என்று வர்ணிக்கப்படும் நடால் 14-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
இந்த நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் நாட்டின் ரபெல் நடாலுடன், நார்வேயின் கேஸ்பர் ரூட் இன்று மோதுகிறார். இறுதிப்போட்டி என்பதால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை யார்? வெல்வார்கள் என மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
14வது முறையாக பிரெஞ்சு ஓபனை ரபெல் நடால் வெல்வாரா என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்ப்பில் உள்ளனர்.