பெர்லின்: பிரபல சொகுசு கார் நிறுவனமான Mercedes, உலகளவில் சுமார் ஒரு மில்லியன் வாகனங்களை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேக்கிங் செயல்பாட்டில் உள்ள கோளாறின் காரணமாக 2004 முதல் 2015 வரை தயாரிக்கப்பட்ட 9,93,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் திரும்பப் பெறப்படுவதாகவும், அதில் 70,000 வாகனங்கள் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டவை எனவும் கூறப்படுகிறது.