மும்பை: திரைப்பட தயாரிப்பாளரின் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொண்ட 55 பிரபல நடிகர், நடிகைகளுக்கு கொரோனா பாசிடிவ் உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால், பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு பிரமாண்டமான விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். திரையுலகம் மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருந்தில், பாலிவுட் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், ஷாருக்கான், கத்ரீனா கைஃப், கியாரா அத்வானி, ஜான்வி கபூர், மலைகா அரோரா மற்றும் கரீனா கபூர் கான் போன்ற நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், கரண் ஜோஹரின் பிரமாண்ட விருந்தில் விருந்தினர்களாக வந்த 50 முதல் 55 பேருக்கு கொரோனா தொற்று பாசிடிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இவர்கள், தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை வெளியெ சொல்லவில்லை என்று தகவல்கள் ெதரிவிக்கின்றன. இவர்களுக்கு யார் மூலம் கொரோனா தொற்று பரவியது என்பது தெரியவில்லை. ஆனால், நடிகர் கார்த்திக் ஆரியனுடன் படத்தில் நடிக்கும் நடிகை மூலம் தொற்று பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் அக்ஷய் குமார் தனக்கு கொரோனா பாசிடிவ் ஏற்பட்டதால், அவர்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிவித்தனர். அதனால், அபுதாபியில் நடக்கும் ஐஐஎப்ஏ – 2022 நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.