பெங்களூரு : நகரில் போதைப்பொருளை சேகரித்து வைத்து, விற்பனை செய்ய முயற்சித்து, போலீசாரிடம் சிக்கிய இருவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பெங்களூரின், சுத்தகுன்டேபாளையா போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில், ஆஷிஸ் ஆயில் என்ற போதைப்பொருளை, பதுக்கி வைத்து விற்பதாக தகவல் கிடைத்தது.
2017 ஜூலை 7ல், போலீசார் சோதனையிட்டு, கேரளாவை சேர்ந்த ஜான்சன் ஜோசப், 31, பிஜு ஆபிரஹாம், 38, ஆகியோரை கைது செய்தனர்.இவர்களிடமிருந்து, 6.777 கிலோ எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையை முடித்த போலீசார், 33 வது கூடுதல் சிட்டி சிவில், செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.விசாரணையில் இவர்களின் குற்றம் உறுதியானதால், இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தது. அபராதம் கட்ட தவறினால், கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கும்படி உத்தரவிட்டது.
பெங்களூரு : நகரில் போதைப்பொருளை சேகரித்து வைத்து, விற்பனை செய்ய முயற்சித்து, போலீசாரிடம் சிக்கிய இருவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.