திண்டுக்கல்: கடமன்குறிச்சியில் போலீசாரிடம் இருந்து தப்பிய கஞ்சா வியாபாரி பொன்னுசாமி சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்று வந்த பொன்னுசாமியை போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். கூம்புர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும்போது கஞ்சா வியாபாரி போலீசாரிடம் இருந்து தப்பினார். அப்போது வாகனம் ஒன்று மோதியதில்பொன்னுசாமி உயிரிழந்தார்.