மதுரை: மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே 70 ஆண்டுகள் பழமையான கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. உணவகம், பழக்கடை உள்ளிட்ட 4 கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் கட்டடம் இடிந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.