மத்திய அரசுக்கு குழப்பம் ஏன்?| Dinamalar

காஷ்மீரில் களையெடுக்க வேண்டிய நபர்களை களையெடுக்கவும், அவர்களை அடையாளம் காணவும், அரசு இயந்திரங்களுக்கும் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே மறைமுகமான போட்டி ஏற்பட்டுள்ளது.

ஒரு புறம், தேச விரோதிகள் என்று கருதுபவர்களை அரசு பணியில் இருந்து வெளியேற்ற அரசு முயற்சி செய்கிறது. அதேநேரத்தில், மக்கள் தொகை அடிப்படையில், வெளியாட்கள் என பார்ப்பவர்களை பயங்கரவாதிகள் மிகவும் கொடூரமான வகையில் கொன்று வருகின்றனர். முக்கியமாக காஷ்மீர் பண்டிட்கள் மற்றும் பிற இடங்களில் இருந்து வந்தவர்களை குறிவைத்து நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியையும், இது குறித்த சமீபத்திய நடவடிக்கைகள் மற்றும் எதிர் நடவடிக்கைகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.

தாங்கள் விரும்பும் எதிர்காலத்திற்கு எடுத்த ‘களையெடுப்பு’ நடவடிக்கைகள் இன்றியமையாததாக இரு தரப்பினரும் கருதுகின்றனர். இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத குழுக்கள், தங்களது நடவடிக்கையை வாழ்க்கை அல்லது மரணம் சார்ந்த விஷயமாக பார்க்கின்றன. இப்போது என்ன செய்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை. கடந்த 1989- 90களில் இருந்ததை போல், அரசு அதிகாரத்தில் உள்ளவர்களும் திணறி வருகின்றனர்.

ஆயுதம் ஏந்தும் இளைஞர்கள்

இளைஞர்களை குறிவைத்து களையெடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. இந்த ஆண்டு துவக்கம் முதல், ஏராளமான காஷ்மீர் இளைஞர்கள் அழைத்து செல்லப்படுவதுடன், விசாரணை நடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பல இளைஞர்கள், காஷ்மீரில் இருந்து நீண்ட தொலைவில் உள்ள சிறைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இது வழக்கமான நடவடிக்கை என்றாலும், இந்த ஆண்டு துவக்கம் முதல் இது வேகம் பிடித்தது. பெரும்பாலும் அறிவிக்கப்படாத நடவடிக்கைகளாக உள்ளன.

பிடித்து வைக்கப்பட்ட இளைஞர்கள் இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒரு பிரிவில் ஆயுதம் ஏந்தியவர்கள். 2வது பிரிவில், ஆயுதம் ஏந்துவதற்கு வாய்ப்புள்ளவர்கள், ஆனால் இதுவரை ஆயுதம் ஏந்தாதவர்கள். இத்தகைய நடவடிக்கைகள், சமமற்ற பதில் என்றாலும், எதிர்மறை நடவடிக்கைகள் உள்ளன. சமீபத்தில், ஏராளமான இளைஞர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களில், பெரும்பாலானவர்கள் காணவில்லை என புகார் அளிக்கப்படவில்லை. இதனால், போலீஸ் மற்றும் புலனாய்வு பிரிவினருக்கு களத்தில் நடக்கும் உண்மையான நிலவரங்கள் பற்றி போதிய தகவல்கள் இல்லை.

பொது மக்கள் கருத்து முக்கியம்


கடந்த 2020ம் ஆண்டு இறுதியில் இருந்து பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் குழுக்களுடன் தொடர்பு உள்ளதாக கருதப்படும் அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். முதலில், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களில் துவங்கி பிறகு மற்ற துறைகளுக்கும் விரிவடைந்தது. சில ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். வேறு சில ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கான திட்டமிடலை சில சக்திவாய்ந்த நபர்கள் அல்லது அமைப்புகள் விடா முயற்சியுடன் உழைத்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. இந்த பணிகள், காஷ்மீரில் சிறப்பு சட்டம் நீக்கப்படுவதற்கு முன்னர் துவங்கியது தெரியவந்துள்ளது.

தற்போது, அழிக்கப்பட வேண்டியவர்கள் அல்லது பதவியில் இருந்து நீக்க வேண்டியவர்கள் பட்டியலையும், தேச விரோத சக்திகள் தயாரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீப காலமாக நடந்து வரும் கொலை சம்பவங்கள், அரசுக்கு முக்கியமான நில பரிமாற்றங்கள் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சிலரை கொல்வதன் மூலம், மற்றவர்கள் உயிருக்கு பயந்து ஓடுவதற்கு இது உதவும்.

மக்களின் அச்சம்


அரசின் பல நடவடிக்கைகள் பொருளாதார ரீதியிலான தாக்குதல் என மக்கள் நினைக்கின்றனர். வேலைவாய்ப்பின்மை எப்போதும் பெரிய அளவிலான பிரச்னையாக உள்ளது. அதுவும் முக்கியமாக அரசு பணி இல்லாததை குறிக்கிறது. பயங்கரவாத தொடர்பு காரணமாக பணி நீக்க நடவடிக்கையானது, பல காஷ்மீரிகளை அரசு பணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். பல அதிகாரிகள், மாநிலத்திற்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். அதில், பலருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

பிரிக்கப்படாத ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல குடும்பங்கள் நிலங்கள் பெற காரணமாக இருந்த ரோஷினி திட்டம் மற்றும் பல திட்டங்களை மாநில அரசு மாற்றியமைத்தது. இந்த நடவடிக்கைகள், பொருளாதார பற்றாக்குறை தோற்றத்தை காஷ்மீர் மக்களின் மனதில் உருவாக்கியுள்ளது. மக்கள் தொகை கணக்கில் பெரிய அளவில் மாற்றம் வரப்போவதாக அவர்கள் கருதி உள்ளனர். இந்த பிரச்னை குறித்தும், அடிப்படைவாத மதவாதம் குறித்தும் இளைஞர்கள் மத்தியில் பலமாக பிரசாரம் செய்யப்படுகிறது.

மக்கள் அதிருப்தி

latest tamil news

ஆனால், அரசின் யோசனையானது பரிதாபத்திற்குரியதாக உள்ளது. சமீபத்தில் நடந்த கொலை சம்பவங்களை தொடர்ந்து, குறிப்பாக காஷ்மீர் பண்டிட்களை பள்ளத்தாக்கை விட்டு வெளியே விடாமல் தடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல பண்டிட் குழுக்கள் போராட்டம் நடத்தினர். காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் ஒவ்வொரு மூலையிலும் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டனர். அதன்மூலம் பயங்கரவாதிகளின் இலக்குகள் பாதுகாக்கப்பட்டிருக்கலாம். அதனை அரசு தெளிவுபடுத்தலாம். ஆனால், தற்போது நடக்கும் கொலை சம்பவங்கள் காரணமாக அரசு அதிருப்தியை எதிர்கொண்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.