நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், இருவரும் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்கள் திருமண அழைப்பிதழை வழங்கி உள்ளனர்.
சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தின்போது, நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவருக்கும் ஜூன் 9-ஆம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெறும் என்று தகவல் வெளியான நிலையில், பின் அது மகாபலிபுரத்தில் மாற்றி வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
தொடர்புடைய செய்தி: நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் குலதெய்வம் கோயிலில் சாமி தரிசனம்
அதை உறுதிசெய்யும் வகையில், இவர்களின் அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டானது. இந்த நிலையில் நயன்தாரா – விக்னேஷ்சிவன் இருவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, தங்கள் திருமண அழைப்பிதழை தற்போது வழங்கி உள்ளனர். அப்போது நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினும் அவர்களுடன் உடனிருந்தார்.