ரஷ்ய படைகளின் முன்னேற்றங்களுக்காக உக்ரைன் தனது நிலப்பரப்பையும் இருப்பிடத்தையும் சிறிதும் விட்டுக்கொடுக்காது என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது டெலிகிராமில் பதிவில் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரானது நான்காவது மாதமாக தொடர்ந்து நடைப்பெற்று கொண்டு இருக்கும் நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் தாக்குதல் கவனம் செலுத்தி வந்த ரஷ்ய ராணுவம் இன்று உக்ரைனின் தலைநகர் கீவ்-விற்கு அருகில் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக ரஷ்யா தெரிவித்துள்ள அறிக்கையில், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், டெலிகிராம் பக்கத்தில் இதுத் தொடர்பாக கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, கிழக்கு பகுதிகளில் ரஷ்ய படைகளின் முன்னேற்றங்களுக்காக உக்ரைன் தனது நிலப்பரப்பு மற்றும் இருப்பிடத்தை சிறிதும் விட்டுக்கொடுக்காது எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதற்கான தண்டனை தவிர்க்க முடியாதது என்பதை உக்ரைன் ரஷ்யாவிற்கு கற்பிக்கும் முக்கிய கொள்கையாகும், ஆனால் அதற்கு முன்னதாக முதலில் உக்ரைன் எதிரிகளால் கைப்பற்றப்படாது, எங்கள் மக்கள் சரணடைய மாட்டார்கள், எங்கள் குழந்தைகள் ஆக்கிரமிப்பாளர்களின் சொத்தாக மாற மாட்டார்கள் என்பதை போர்க்களத்தில் கற்பிக்க வேண்டும் எனத் உறுதியாக தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: நாடுகளை சண்டைக்கு இழுக்கும் சீனா: கனடா, ஆவுஸ்திரேலிய போர் விமானங்கள் இடைமறிப்பு
ஜெலன்ஸ்கியின் இந்த கருத்தானது, உக்ரைனிய தலைநகருக்கு அருகில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகான சிறுது நேரத்தில் வெளிவந்துள்ளது.