ரஸ்யாவின் ஏரோபுளோட் விமானம் இலங்கையில் இருந்து வெளியேற தடை விதித்து கொழும்பு வணிக மேல் நீதிமன்ம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதனை மையப்படுத்தி ரஸ்யா இலங்கை உறவில் விரிசல் ஏற்படும் அபாயம்தோன்றியுள்ளது.
தனது விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு ரஸ்யா அதிருப்தி வெளியிட்டுள்ள நிலையில் ரஸ்யாவுக்கான இலங்கை தூதுவர் ஜனிதா லியனகே ரஸ்ய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு நேரில் அவரிடம் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து ரஸ்ய வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,