ராமேஸ்வரத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட 600 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமேஸ்வரம் அருகே மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத் துறைக்குயினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட 600 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்கள் யார் என்று வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM