இந்தியாவில் டிஜிட்டல் சேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதில் டிஜிட்டல் கடன் சேவை வர்த்தகமும் தற்போது மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் அதிகரித்துள்ளது.
இந்த டிஜிட்டல் கடன் சேவை மூலம் சமானிய மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ராக்கெட் வட்டி, ஆள் வைத்து மிரட்டும் வேளைகளை இந்த டிஜிட்டல் கடன் சேவை நிறுவனங்கள் செய்கிறது.
ரூபாய் நோட்டில் இரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படம்.. ஆர்பிஐ – நிதியமைச்சகம் திட்டம்..?!
ஹோட்டல் ஊழியர்
நாக்பூரைச் சேர்ந்தவரான குமார் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையலறை மேற்பார்வையாளராக பணிபுரிகிறார். இவர் மும்பையில் தங்கியிருக்க, அவரது குடும்பத்தினர் நாக்பூரில் தங்கியுள்ளனர்.
மருத்துவ செலவு
இந்நிலையில் குமாரின் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்ட நிலையில் மார்ச் 28 அன்று, குமாப் தனது தொலைப்பேசியில் மொபைல் லோன் செயலியை பதிவிறக்கம் செய்தார்.
லோன் செயலி
இந்த லோன் செயலி மூலம் ஒரு வாடிக்கையாளர் கடன் பெற வேண்டும் என்றால் தனது தொலைபேசியில் கான்டெக்ட்ஸ் முதல் பலவற்றுக்கு அணுக அனுமதி அளிக்க வேண்டியது அடிப்படையான விதிமுறையாக வைக்கப்பட்டு உள்ளது இந்தநிறுவனங்கள்.
முக்கிய தகவல்
இதன் அடிப்படையில் குமார் தனது போனில் சில அனுமதிகளை வழங்கிய பின்னர் புகைப்படம், அடையாள அட்டை மற்றும் வங்கி விவரங்களை செயலியில் பகிர்ந்துள்ளார். இதை தொடர்ந்து சில மணிநேரத்தில் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு கடன் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
ரூ. 5000 கடன்
குமாருக்கு அப்போதைய பண தேவை என்பது ரூ. 50,000 தேவைப்பட்டு உள்ளது, ஆனால் லோன் செயலி மூலம் குமாரின் வங்கிக் கணக்கில் ரூ. 5000 மட்டுமே டெப்பாசிட் செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஒரு வாரத்திற்குள் ரூ.8,200 திருப்பி செலுத்த வேண்டும்.
லோன் ரெக்கவரி ஏஜெண்ட்
ஏப்ரல் 02 ஆம் தேதி, குமார் கூறிய தொகையைத் திருப்பிச் செலுத்தினார், ஆனால் அவருக்குக் கடனைத் திருப்பிச் செலுத்துமாறு தொடர்ந்து மெசேஜ் மற்றும் அழைப்பு வந்தன. லோன் ரெக்கவரி ஏஜெண்ட் குமாரின் போனில் இருந்து திருடப்பட்ட புடைப்பட்டத்தை மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படமாக மாற்றி அவருக்கு அனுப்பத் தொடங்கினர், மேலும் அந்த புகைப்படத்தை அவரது தொடர்பு பட்டியலில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு மிரட்டியுள்ளனர்.
15 லோன் ஆப்கள்
200 முதல் 250 மீட்பு முகவர்களிடமிருந்து பணத்தைத் திருப்பிச் செலுத்துமாறு அழைப்புகள் மற்றும் மெசேஜ் பெறத் தொடங்கினார். இந்த நிலையில் லோன் ரெக்கவரி ஏஜெண்ட் குமாரை மிரட்டியே குறைந்தது 15 லோன் ஆப்களை பதிவிறக்கம் செய்து, அவர்களிடமிருந்து கடனைப் பெற்று கடனைத் திருப்பிச் செலுத்தும்படி கட்டாயப்படுத்தினர்.
4.28 லட்ச ரூபாய்
குமார் வேறு வழியில்லாமல் தேவையில்லாமல் ஒரு கடனுக்கு 15 கடன்களை லோன் ரெக்கவரி ஏஜெண்ட்களின் அறிவுறுத்தலைப் பின்பற்றி மேலும் சுரண்டப்படவும் துன்புறுத்தப்பட்டு உள்ளதாக சுனாபாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்படி குமார் 4.28 லட்சத்தை கடன் சுறாக்களுக்கு செலுத்தியுள்ளார் என ப்ரீ பிரஸ் ஜர்னல் தெரிவித்துள்ளது.
Mumbai hotel worker took Rs 5k loan ends up paying Rs 4.28L to loan app sharks
Mumbai hotel worker took Rs 5k loan ends up paying Rs 4.28L to loan app sharks லோன் ஆப் நிறுவனங்களின் அட்டூழியம்.. 5000 ரூபாய் கடனுக்கு 4.28 லட்சம் செலுத்தும் நிலை..!