ரஷ்யா – உக்ரைன் போருக்கு பின்பு பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக எரிபொருள், உணவு பொருட்களின் விலை பெரிய அளவில் அதிகரித்து உள்ளது.
இதன் மூலம் இங்கிலாந்தில் தற்போது பீர் விலை அதிகரித்துள்ளது.
2008 ஆம் ஆண்டின் நிதி நெருக்கடிக்குப் பின்னர் இங்கிலாந்தில் ஒரு பைண்ட் பீர்-ன் விலை 70% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும் பணவீக்கத்தை சமாளிக்க மதுக்கடைகள் போராடுவதால் லண்டனில் முதல் முறையாக ஒரு பைண்ட் பீர் 8 பவுண்டு ($10) வரையில் அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் ஒரு பைண்ட் பீரின் சராசரி விலை 2008 இல் 2.30 பவுண்டாக இருந்ததில் இருந்து இந்த ஆண்டு £3.95 ஆக அதிகரித்துள்ளது. உக்ரைன் மீதான போர் மூலம் உருவான பாதிப்புகளால் பீர் தயாரிப்பதற்கு பார்லியின் விலை உயர்ந்து வருவதால் பப்களில் பீர் விலை பெரிய அளவில் உயர்த்துள்ளது.
27500 பேருக்கு வேலைவாய்ப்பு.. மிந்திரா அதிரடி அறிவிப்பு..!
பிரிட்டனின் 90,000 பப்கள் மற்றும் பார்களின் விலை நிலவரத்தை மதிப்பாய்வு செய்த CGA அமைப்பு, லண்டனில் ஒரு பைண்ட் பீர் வில் 8.06 பவுண்ட் என்ற அளவில் இருப்பதாக அய்வுகள் கூறுகிறது. இதேபோல் இங்கிலாந்தில் முதல் முறையாக பீர் விலை 8 பவுண்டு-க்கு மேல் உயர்ந்ததாக கூறியுள்ளது.
இதேபோல் இங்கிலாந்தில் லங்காஷயர்-ல் தான் மிகவும் குறைவான விலையில் அதாவது ஒரு பைண்ட் பீர் 1.79 பவுண்டுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
London Beer Prices Tops 8 pound a Pint for First Time
London Beer Prices Tops 8 pound a Pint for First Time விண்ணை தொட்ட பீர் விலை.. இங்கிலாந்து ‘குடி’மக்கள் சோகம்..!