புதுச்சேரியில் இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், நைனார்பாளையம் சேர்ந்த புகழேந்தி என்பவர், புதுச்சேரியில் பேட்டரி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த புகழேந்தி, திருச்சிற்றம்பலம் அருகே பின்னால் வந்த லாரி லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விபத்தை ஏற்படுத்திய லாரி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஒரு அண்மைய செய்தி : கடலூர் கெடிலம் ஆற்றங்கரையில் 7 சிறுமியர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த மனவேதனையை அளித்தது; ஆறு, குளங்களில் குளிக்கச் செல்லும் சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைவரும் கவனம் செலுத்த வேண்டுகிறேன் என்று, சற்றுமுன் தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், வாழ வேண்டிய இளந்தளிர்கள் இவ்வாறு இழக்கப்படுவது இனியாவது தடுக்கப்படும் வகையில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என உறுதி ஏற்குமாறு உங்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.