Tamilnadu Government transfer 44 IPS officers list here: 44 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் தாம்பரம், கோவை, நெல்லைக்கு புதிய கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 44 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தாம்பரம் காவல் ஆணையராக, அமல்ராஜ் ஐ.பி.எஸ், நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்பு காவலர் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றி வந்தார்.
ஆயுதப்படை ஐ.ஜி.,யாக கண்ணன் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த தேன்மொழி ஐ.பி.எஸ் வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி.,யாக பணியாற்றி வந்த மகேஸ்வரி ஐ.பி.எஸ், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய மண்டல ஐ.ஜி.,யாக பணியாற்றி வந்த பாலகிருஷணன் ஐ.பி.எஸ், கோவை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவினாஷ் குமார் ஐ.பி.எஸ், திருநெல்வேலி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி ஐ.ஜி.,யாக பணியாற்றி வந்த ஜெய கௌரி ஐ.பி.எஸ், தமிழ்நாடு காவல் பயிற்சி நிறுவனத்தின் கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி காவல் ஆணையராக பணியாற்றி வந்த சந்தோஷ் குமார் ஐ.பி.எஸ், மத்திய மண்டல ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் எஸ்.பி., விஜயகுமார் ஐ.பி.எஸ், சென்னை அண்ணா நகர் காவல் துணை ஆணையராகவும், சென்னை வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சுந்தரவதனம் ஐ.பி.எஸ், கரூர் எஸ்.பி.,யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை அண்ணா நகர் காவல் ஆணையர் சிவபிரசாத் ஐ.பி.எஸ், மதுரை எஸ்.பி.,யாகவும், மதுரை எஸ்.பி.,யாக இருந்த பாஸ்கரன் திண்டுக்கல் எஸ்.பி.,யாகவும், திருவண்ணாமலை எஸ்.பி., பவன் குமார் ரெட்டி ஐ.பி.எஸ், சென்னை வண்ணாரப்பேட்டை காவல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் எஸ்.பி சுந்தரவடிவேல், கடற்கரை பாதுகாப்பு எஸ்.பி.,யாகவும், திண்டுக்கல் எஸ்.பி, ஸ்ரீனிவாசன், திருநெல்வேலி கிழக்கு துணை காவல் ஆணையராகவும், அங்கு பணியாற்றி வந்த சுரேஷ்குமார் திருவாரூர் எஸ்.பி.,யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் எஸ்.பி., கார்த்திக் ஐ.பி.எஸ், சென்னை சிபிசிஐடி எஸ்.பி.,யாகவும், மதுரை தெற்கு துணை காவல் ஆணையர் தங்கதுரை, இராமநாதபுரம் எஸ்.பி.,யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் அமலாக்கப் பிரிவு எஸ்.பி ஜெயந்தி ஐ.பி.எஸ், சி.ஐ.யூ பிரிவு எஸ்.பி.,யாகவும், காவலர் பயிற்சி கல்லூரி முதல்வர் மணிவண்ணன் ஐ.பி.எஸ், ஆவடி செங்குன்றம் காவல் துணை ஆணையராகவும், திருவள்ளூர் எஸ்.பி., வருண்குமார் ஐ.பி.எஸ், மதுரை அமலாக்கப்பிரிவு எஸ்.பி.,யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பகேர்லா செபாஸ் கல்யான் ஐ.பி.எஸ், திருவள்ளூர் எஸ்.பி.,யாகவும், சென்னை சைபர் கிரைம் எஸ்.பி., சண்முகப்பிரியா, என்.ஆர்.ஐ பிரிவு எஸ்.பி.,யாகவும், கீழ்பாக்கம் காவல் துணை ஆணையர் கார்த்திக்கேயன் ஐ.பி.எஸ், திருவண்ணாமலை எஸ்.பி.,யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை கிழக்கு போக்குவரத்து துணை காவல் ஆணையர் ஓம் பிரகாஷ் மீனா ஐ.பி.எஸ், தமிழ்நாடு சிறப்பு படை அதிகாரியாகவும், சேலம் தெற்கு காவல் துணை ஆணையர் மோகன் ராஜ், மதுரை வடக்கு காவல் துணை ஆணையராகவும், கோவை வடக்கு காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் ஐ.பி.எஸ், பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.,யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை போக்குவரத்து துணை காவல் ஆணையர் செந்தில்குமார், சென்னை தலைமையிடத்து காவல் துணை ஆணையராகவும், மதுரை தலைமையிடத்து காவல் துணை ஆணையர் ஸ்டாலின், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையராகவும், கோவை தலைமையிடத்து காவல் துணை ஆணையர் செல்வராஜ், காவலர் பயிற்சி கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி தெற்கு காவல் துணை ஆணையர் முத்தரசு, லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.,யாகவும், மதுரை வடக்கு காவல் துணை ஆணையர் ராஜசேகரன் ஐ.பி.எஸ், டி.ஜி.பி அலுவலக அதிகாரியாகவும், திருநெல்வேலி மேற்கு காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார், திருச்சி தலைமையிடத்து காவல் துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை கண்காணிப்பு அறை காவல் துணை ஆணையர் ராமர் ஐ.பி.எஸ், தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்.பி.,யாகவும், மதுரை பட்டாலியன் கமாண்டர் தேஷ்முக் சேகர் சஞ்சய் ஐ.பி.எஸ், சென்னை சைபர் கிரைம் காவல் துணை ஆணையராகவும், சிவில் சப்ளைஸ் எஸ்.பி, ஸ்டாலின், சென்னை சைபர் அரங்கம் எஸ்.பி.,யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்: கோவையில் ஸ்விக்கி ஊழியரை தாக்கிய காவலர்… கண்ணீர் விட்ட இளைஞர் – நடந்தது என்ன?
ஆவடி ரெஜிமண்டல் கமாண்டர் வெண்மதி ஐ.பி.எஸ், மனித உரிமைகள் பிரிவு எஸ்.பி.,யாகவும், அந்த பதவியிலிருந்த விஜயலக்ஷ்மி ஐ.பி.எஸ்,, ஆவடி ரெஜிமண்டல் கமாண்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் தெற்கு காவல் துணை ஆணையர் ரவி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.,யாகவும், திருச்சி வடக்கு காவல் துணை ஆணையர் சக்திவேல், சென்னை தெற்கு போக்குவரத்து காவல் துணை ஆணையராகவும், கோவை தெற்கு காவல் துணை ஆணையர் உமா ஐ.பி.எஸ்,, ரயில்வே எஸ்.பி.,யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சைபர் அரங்கம் எஸ்.பி., வேதரத்தினம், லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.,யாகவும், சைபர் கிரைம் எஸ்.பி., அருண் பாலகோபாலன் ஐ.பி.எஸ், சி.பி.சி.ஐ.டி எஸ்.பி.,யாகவும், அமலாக்கப் பிரிவு எஸ்.பி அசோக்குமார், சைபர் கிரைம் எஸ்.பி.,யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.