Tamil Nadu News Updates: தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை பெறும் திட்டம் சென்னை கோயம்பேட்டில் இன்று தொடக்கம். சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு, இயந்திரத்தில் மஞ்சப்பை பெறும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
பெட்ரோல் – டீசல் விலை நிலவரம்
சென்னையில் 14வது நாளாக பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ94.24க்கும் விற்பனை
கோவையில் ஸ்வீக்கி ஊழியரை தாக்கிய காவலர் கைது
கோவையில் உணவு டெலிவரி செய்யும் இளைஞரை அத்துமீறி தாக்கிய போக்குவரத்து காவலர் கைது. தற்காலிக பணி நீக்கம் செய்து காவல் துறை உத்தரவு
பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மறுதேர்வு
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி உத்தரவு
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்
தமிழ்நாட்டில் 44 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ், கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன், நெல்லை மாநகர காவல் ஆணையராக அவினாஷ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் புதிதாக 12 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பி.ஏ. 4, 5 வகை தொற்றால் பாதிக்கப்பட்ட 12 பேரும் கண்காணிப்பில் உள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
சென்னை, கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
கடலூர் மாவட்டம், ஏ.குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் ஆற்றுத் தடுப்பணையில் குளிக்கச் சென்ற 4 சிறுமிகள் உட்பட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 7 பேரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் 12 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் இயல்பைவிட வெப்ப நிலை 3 டிகிரி அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிமுக தான் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் இடையே பெரிய விரிசல் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிகளுக்கான கிட்டில் 2 பொருள்களை தனியாரிடம் வாங்கியதால் அரசுக்கு ரூ77 கோடி இழப்பு. ஹெல்த் மிக்ஸை ஆவினுக்கு பதில் தனியாரில் வாங்குவதால் தமிழக அரசுக்கு ரூ45 கோடி நஷ்டம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு
சென்னை மலர் கண்காட்சியில் கடந்த 2 நாள்களில் ரூ8.35 லட்சம் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ50, சிறுவர்களுக்கு ரூ20 கட்டண தொகையாகும்.
இந்தியாவில் ஒவ்வொரு 36 குழந்தைகளில் ஒரு குழந்தை ஒரு வயதுக்குள் உயிரிழப்பதாக இந்திய பதிவாளர் ஜெனரல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
காயிதே மில்லத்தின் 127 ஆவது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை வாலாஜா சாலை பெரிய பள்ளிவாசலில் உள்ள நினைவிடத்தில் மலர்ப்போர்வை அணிவித்து மரியாதை.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,270 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,619 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, கொரோனாவுக்கு 24 ஆயிரத்து 52 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 20 குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 77 இடங்களில் காலை மற்றும் மதியம் என இரு வேளைகளாக நடத்தப்படுகிறது.
பிரஞ்சு ஓபன் மகளிர் டென்னிஸ் இறுதிப்போட்டியில் போலந்து வீராங்கணை இகா ஸ்வியாடெக் 2 ஆவது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார். அமெரிக்கா வீராங்கணை கோகோ காப்ஐ வீழ்த்தினார்.
ஆவடி அடுத்த பட்டாபிராம் மேம்பாலத்தில் அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து. இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த இளைஞர் உயிரிழப்பு; காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதி
பிளாஸ்டிக்கை பார்த்தாலே மக்களுக்கு கோபம் வர வேண்டும். அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பைகளை பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும் என மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.