WFH: மீண்டும் லாக்டவுனா..? மும்பை நிறுவனங்களில் மாஸ் கட்டாயம்..!

இந்தியாவின் முக்கிய வர்த்தக மற்றும் நிதியியல் முதலீட்டு மாநிலமான மகாராஷ்டிராவில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு மீண்டும் கோவிட் தட்டுப்பாடுகள் விதிக்கத் துவங்கியுள்ளது.

இதனால் இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

சீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாகிஸ்தான்.. எங்களுக்கே வரியா..?

மாஸ்க் கட்டாயம்

மாஸ்க் கட்டாயம்

மஹிந்திரா மற்றும் மஹிந்திரா, டெலாய்ட் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்கள் கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியுள்ளது. மேலும் அனைத்து ஊழியர்களையும் கட்டாயம் மாஸ்க் அணிய செய்யக் கட்டாயமாக்கியுள்ளது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

போர்ப்ஸ், மார்ஷல், தெப்மேக்ஸ், மாரிகோ, டெக் மஹிந்திரா, மோதிலால் ஆஸ்வால், ஜின்டால் ஸ்டெயின்லெஸ் ஆகியவையும் கோவிட் நெறிமுறைகளைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தால், பல கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு மாஸ் பரிசோதனையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளன. பல நிறுவனங்கள் பூஸ்டர் ஷாட்களை எடுக்க ஊழியர்களை அறிவுறுத்தி வருகிறது.

பொது இடங்கள்
 

பொது இடங்கள்

ரயில்கள், பேருந்துகள், திரையரங்குகள், ஆடிட்டோரியங்கள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் போன்ற மூடப்பட்ட பொது இடங்களில் முகமூடி அணிவது அவசியம் என உத்தரவுகள் மகாராஷ்டிர மாநிலத்தில் பல மாவட்டத்தில் வெளியாகியுள்ளது.

முக்கியப் பகுதிகள்

முக்கியப் பகுதிகள்

மும்பை, புனே, பால்கர், ராய்காட் மற்றும் தானே உள்ளிட்ட ஆறு முக்கியத் தொழில்துறை மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்திற்குள் வழக்குகள் இரு மடங்காக அதிகரித்துள்ளன.

லாக்டவுன் கட்டுப்பாடுகள்

லாக்டவுன் கட்டுப்பாடுகள்

இதன் தொடர்ந்து இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பிற பகுதிகளில் மஸ்க் அணிவது, இடைவெளி கடைப்படிப்பது, ஊழியர்கள் எண்ணிக்கை ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.

வொர்க் பர்ம் ஹோம்

வொர்க் பர்ம் ஹோம்

இதனால் வொர்க் பர்ம் ஹோம் அடுத்தச் சில மாதங்களுக்குத் தொடரும் நிலை உருவாகியுள்ளது. இதேபோல் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் நிறுவனங்கள் தங்களது முடிவை ஒத்துவைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Mumbai companies bring back Covid curbs amid cases of increased

Mumbai companies bring back Covid curbs amid cases increased WFH: மீண்டும் லாக்டவுனா..? மும்பை நிறுவனங்களில் மாஸ் கட்டாயம்..!

Story first published: Sunday, June 5, 2022, 21:23 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.