மும்பை : ‘ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்’ அதிபர் முகேஷ் அம்பானியின் வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சன்டின் பரத நாட்டிய அரங்கேற்றம், மஹாராஷ்டிராவின் மும்பையில் விமரிசையாக நடந்தது.மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்தவர் விரேன் மெர்ச்சன்ட். இவரது மனைவி ஷைலா மெர்ச்சன்ட்.’என்கோர் ஹெல்த்கேர்’ நிறுவனத்தின் அதிபரான விரேனின் மகள் ராதிகா மெர்ச்சன்டுக்கும்,
‘ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்’ அதிபர் முகேஷ் அம்பானி – நீத்தா அம்பானி தம்பதியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.இளம் தொழிலதிபராக உள்ள ராதிகா, கலைகள் மீது ஆர்வம் உள்ளவர். பிரபல பரத நாட்டிய கலைஞர் பாவனா தாக்கரிடம் பரத நாட்டியம் பயின்றார். எட்டு ஆண்டு பயிற்சிக்குப் பின், ராதிகா மெர்ச்சென்டின் பரதநாட்டிய அரங்கேற்றம், மும்பையில் உள்ள, ‘ஜியோ வேர்ல்ட் சென்டர்’ அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது.வருங்கால மருமகளின் பரத நாட்டிய அரங்கேற்றத்திற்கு முகேஷ் – நீத்தா தம்பதியினர் நேரில் வந்து வாழ்த்தினர். பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் நிகழ்ச்சியை காண வந்தனர். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சி பாதுகாப்பாக நடத்தப்பட்டது.
Advertisement