அம்பானி வருங்கால மருமகளின் நாட்டிய அரங்கேற்றம்: குவிந்த பாலிவுட் பிரமுகர்கள்!

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்ட் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் மும்பையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதனை அடுத்து இந்த விழாவில் ஏராளமான பாலிவுட் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வருகை தந்து ராதிகா அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் சி.இ.ஓ விரென் மெர்சென்ட், சாய்லா மெர்சென்ட்டின் மகளான பரதநாட்டிய கலைஞர் ராதிகா மெர்சென்ட்டின் பரதநாட்டிய அரங்கேற்றம் மிகவும் சிறப்பாக அமைந்ததாக அனைவரும் கருத்து கூறினர்.

மீண்டும் முதலிடத்தில் அம்பானி: அதானியை பின்னுக்கு தள்ளியது எப்படி?

ராதிகா மெர்ச்சண்ட்

ராதிகா மெர்ச்சண்ட்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு ராதிகா மெர்ச்சண்ட் அவர்களுக்கு திருமணம் முடிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக பரதநாட்டியம் பயின்று வரும் ராதிகா அவர்களின் நாட்டிய அரங்கேற்ற விழா மும்பை ஜியோ வேர்ல்ட் சென்டரில் உள்ள கிராண்ட் தியேட்டரில் நடைபெற்றது.

நாட்டிய அரங்கேற்றம்

நாட்டிய அரங்கேற்றம்

இந்த நாட்டிய அரங்கேற்ற விழாவில் கலந்து கொண்ட பல முக்கிய தலைவர்கள், தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் ராதிகா மெர்சன்டை வாழ்த்தி அவருக்கு ஊக்கம் அளித்தனர்.

பரத நாட்டியம்
 

பரத நாட்டியம்

ராதிகா கடந்த 8 ஆண்டுகளாக பரத நாட்டியம் கற்று கொண்டு வரும் நிலையில் இந்த அரங்கேற்றம் விழா ராதிகாவின் சிறப்பாக நிகழ்வாக அமைந்தது. மேலும் அவரது குரு பாவனா தாக்கருக்கும் மனநிறைவான ஒரு விழாவாக அமைந்ததாக தெரிகிறது.

குரு-சிஷ்ய உறவு

குரு-சிஷ்ய உறவு

நாட்டிய அரங்கேற்றம் என்பது ஒரு பரதநாட்டிய கலைஞரின் வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. பாரம்பரியத்தின் தொடர்ச்சிம், குரு-சிஷ்ய உறவின் முக்கியத்துவத்தை இந்த அரங்கேற்றம் குறிக்கிறது. இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியின்போது, அனைத்து பாரம்பரிய அம்சங்களையும் கொண்ட ராதிகாவின் நடனம், பாவனையை அனைவரும் பாராட்டினர்.

புஷ்பாஞ்சலி

புஷ்பாஞ்சலி

மேலும் இந்த அரங்கேற்றா விழாவில் பார்வையாளர்களின் ஆசீர்வாதத்தை வேண்டி புஷ்பாஞ்சலி தொடங்கி, கணேஷ் வந்தனா மற்றும் பாரம்பரிய அலரிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கைதட்டல்

கைதட்டல்

ராதிகாவின் பரதநாட்டிய திறமை, நடன முத்திரைகள் மூலம் காட்டும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன் கண்களுக்கு விருந்தளித்தன என பார்வையாளர்கள் தெரிவித்தனர். அரங்கேற்ற நிகழ்ச்சி முடியும்போது பார்வையாளர்களின் கைதட்டல் ஓசை விண்ணை பிளந்தது என்று கூறலாம்.

நீடா அம்பானி

நீடா அம்பானி

ஏற்கனவே நீடா அம்பானி பரதநாட்டிய கலையை முறையாக பயின்றவர் என்ற நிலையில் தற்போது அவரது குடும்பத்தில் இன்னொரு நேர்த்தியான, நடன அசைவுகள் கொண்ட பரதநாட்டிய கலைஞர் உருவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் பிரபலங்கள்

பாலிவுட் பிரபலங்கள்

இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான், ரன்வீர் சிங், அமீர் கான் போன்றவர்களும், கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான், மனைவியும் நடிகையுமான சகரிகா காட்கே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Mukesh, Nita Ambani organise Anant Ambani’s fiancée Radhika Merchant’s ‘arangetram’

Mukesh, Nita Ambani organise Anant Ambani’s fiancée Radhika Merchant’s ‘arangetram’ | அம்பானி வருங்கால மருமகளின் நாட்டிய அரங்கேற்றம்: குவிந்த பாலிவுட் பிரமுகர்கள்!

Story first published: Tuesday, June 7, 2022, 7:43 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.