ஆண்டுதோறும் மின் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரிப்பு: 2026ம் ஆண்டுக்குள் முரண்பாடு சரியாகும் என ஆய்வில் தகவல்

டெல்லி: நாட்டில் மின்சார பற்றாக்குறை மற்றும் நிலக்கரிக்கான தேவை அதிகரிப்பதுடன் வரும் காலங்களில் அது தொடரும் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் 75% அனல்மின் நிலையங்களில் இருந்து கிடைக்கிறது. ஆனால் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு அனல்மின் நிலையங்களில் திறன் குறைவாகவே இருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டு வரை வருடந்தோறும் மின்பற்றாக்குறை 4%-மாகவும், அனல்மின் நிலையங்களின் திறன் அதிகரிப்பு அதிகரிப்பு 1%-மாகவும் இருந்து வருகிறது. 2019 முதல் நடப்பாண்டு வரை அனல்மின் நிலையங்களில் திறன் அதிகரிப்பு 2%-மாக உயர்ந்தாலும், மின்பற்றாக்குறை 5%-த்தை எட்டியுள்ளது. மின்விநியோகம் மற்றும் மின் தேவைக்கு இடையேயுள்ள முரண்பாடுகளை தீர்க்க அனல்மின் நிலையங்களில் கூடுதலாக 27 ஆயிரம் மெகாவாட் திறன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமாக 2026-ம் ஆண்டுக்குள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.          

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.