ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மென்பொருள் அறிமுகம்: சிறப்பம்சங்கள் என்னென்ன?


 ஆப்பிள் தொழிநுட்ப நிறுவனம் திங்களனறு நடத்திய உலகளாவிய மென்பொருள் மேம்பாட்டாளர்கள் மாநாட்டில், தங்களது புதிய மென்பொருளான iOS 16-ஐ அறிமுகப்படுத்தியது.

ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருள் பொறியியலின் மூத்த துணைத் தலைவரான Craig Federighi தங்களது நிறுவனத்தின் சமீபத்திய புதிய மென்பொருளான iOS 16-ஐ மாநாட்டில் அறிமுகப்படுத்தி அதன் சிறப்புகளை வெளிப்படுத்தினார்.

அவற்றில் iOS 16-ஐ இயங்கு தளமாக கொண்டு செயல்படும் ஐபோன் தொழில்நுட்பத்தில், லாக் ஸ்கிரீனில் இதுவரை இல்லாத மிகப்பெரிய புதுப்பிப்புகளை காணலாம் எனத் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மென்பொருள் அறிமுகம்: சிறப்பம்சங்கள் என்னென்ன?

அந்தவகையில், பயனர்கள் இப்போது பூட்டுத் திரையில் விட்ஜெட்களை (widgets)சேர்க்க முடியும் மற்றும் உங்களது புதிய தகவல் அறிவிப்புகள் (message) இனி திரையின் அடிப்பகுதியில் தேன்றும் என தெரிவித்துள்ளார்.

இத்துடன் ஆப்பிள் நிறுவனம் தங்களது பயனர்களின் மெசேஜிங் செயலியில் மூன்று புதிய அம்சங்களை சேர்த்துள்ளது. அதன் அடிப்படையில், பயனர்கள் இப்போது அனுப்பட்ட iMessages ஐத் திருத்தவும், தவறுதலாக அனுப்பப்பட்டவற்றை நீக்கவும், தேவையற்ற iMessages ஐ உறக்கநிலையில் வைக்கவும் முடியும்.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மென்பொருள் அறிமுகம்: சிறப்பம்சங்கள் என்னென்ன?

கூடுதல் செய்திகளுக்கு: இந்திய வம்சாவளியை சேர்ந்த பணகார குப்தா சகோதரர்கள்: ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது!

மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் Apple Pay-இல் Apple Pay லேட்டர் என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்முலம் பயனர்கள் தங்கள் வாங்குதல்களுக்கு நான்கு தவணைகளில் வட்டி இல்லாமல் பணம் செலுத்தும் வசதியை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மென்பொருள் அறிமுகம்: சிறப்பம்சங்கள் என்னென்ன?



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.