இது டாடாவின் டிவிடெண்ட் திருவிழா.. 605% வரை வருமானம்.. யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

சமீபத்திய வாரங்களாகவே பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து இனிப்பான செய்திகள் வந்து கொண்டுள்ளன எனலாம். குறிப்பாக மூன்று டாடா குழும நிறுவனங்கள் டிவிடெண்ட் பற்றிய இறுதி அறிவிப்பினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது அதிகமாக இருந்தாலும், இதுபோன்ற ஊக்க அறிவிப்புகள் முதலீட்டாளர்களுக்கு பெரும் சர்பிரைஸ் கொடுப்பதாக அமைந்துள்ளது எனலாம்.

அந்த வகையில் டாடா குழுமத்தின் டிவிடெண்ட் திருவிழாவில் 3 டாடா நிறுவனங்கள், 207 – 605% வரையில் டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி குவிக்க திட்டமிடும் இந்தியா.. திகைக்கும் உலக நாடுகள்..!

டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்

டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்

இதில் ஒன்று டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட். எஃப் எம் சி ஜி நிறுவனமான இது, டீ, காஃபி, தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வணிகம் செய்து வருகின்றது. இது உற்பத்தி, வர்த்தகம், சப்ளை என அனைத்தும் செய்து வரும் லார்ஜ் கேப் நிறுவனமான இதன் எபிட்டா விகிதம் , மார்ச் காலாண்டில் 45% அதிகரித்து, 458 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த நிதியாண்டில் 11% அதிகரித்து, 1749 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் காலாண்டு நிகரலாபம் 239 கோடி ரூபாயாகவும், இதே கடந்த நிதியாண்டில் நிகரலாபம் 1015 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட் டிவிடெண்ட்

டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட் டிவிடெண்ட்

இந்த நிறுவனம் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில், ஒரு பங்குக்கு டிவிடெண்டாக 605% அல்லது 6.05 ரூபாயாகவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த டிவிடெண்ட் குறித்து இறுதி அறிவிப்பு , அதன் வருடாந்திர கூட்டத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இறுதி செய்யப்படும் பட்சத்தில் 30 நாட்களுக்குள் இறுதியாக முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா கம்யூனிகேஷன்ஸ்
 

டாடா கம்யூனிகேஷன்ஸ்

மிட் கேப் நிறுவனமான டாடா கம்யூனிகேஷன்ஸ், டிஜிட்டல் பொருளாதாரத்தினை மேம்படுத்த வழிவகுக்கலாம். கடந்த மார்ச் காலாண்டில் இதன் லாபம் 18.5% அதிகரித்துள்ளது. இது கடந்த 2022ம் நிதியாண்டில் 1482 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனம் ஒரு பங்குக்கு 20.7 ரூபாய் டிவிடெண்டினையும் பரிந்துரை செய்துள்ளது.

வோல்டாஸ்

வோல்டாஸ்

டாடா குழுமத்தினை சேர்ந்த கன்சியூமர் டியூரபிள் நிறுவனத்தின் லாபம் மார்ச் காலாண்டில் 23.46% குறைந்து, 182.71 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 238.72 கோடி ரூபாயாக இருந்தது. இதன் வருவாய் விகிதம் 0.76% அதிகரித்து, 2703.78 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 2683.24 கோடி ரூபாயாக இருந்தது. 1 ரூபாய் முக மதிப்புள்ள இந்த நிறுவனம், ஒரு பங்குக்கு 550% அல்லது 5.50 ரூபாய் டிவிடெண்டினை பரிந்துரை செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

3 Tata companies will soon pay Dividend between 207 – 605%

3 Tata companies in the Tata Group are expected to pay dividends ranging from 207 – 605%.

Story first published: Tuesday, June 7, 2022, 14:09 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.