இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக சேவை செய்து கொண்டிருந்த Express VPN திடீரென இந்தியாவிலிருந்து வெளியேறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்லைன் பயனாளிகள் பாதுகாப்பாக தங்களது கணினியில் பணிபுரிய வழிவகை செய்யும் ஒரு அமைப்புதான் VPN என்பது அனைவரும் அறிந்ததே.
அரசாங்கம் முதல் தனி நபர்கள் வரை தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட பலருக்கும் பாதுகாப்பு அம்சங்களை VPN மேற்கொண்டு வருகிறது.
ரூபாயின் மதிப்பு இன்னும் மோசமான நிலையை எட்டலாம்.. எப்படி சமாளிக்க போகிறது இந்தியா?
VPN சேவை
நேரடியாக அக்சஸ் செய்ய முடியாத வலைதளங்கள், வலைத்தள சேவைகள் மற்றும் டிராக் செய்ய முடியாதவற்றை VPN சேவைகள் செய்து வருவதால் பலரும் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
புதிய விதிமுறைகள்
ஆனால் அதே நேரத்தில் ஆன்லைன் மோசடி, ஹேக் செய்வது, பிரவேசி தன்மை இல்லாமல் இருப்பது, அண்டர்கிரவுண்ட் சேனல்கள் ஆகியவற்றுக்கும் VPN பயன்படுத்தி வருவதாக கூறப்பட்டு வருவதை அடுத்து இந்திய அரசாங்கம் VPN பயன்படுத்துவதில் சில புதிய விதிமுறைகளை அறிவித்தது.
எக்ஸ்பிரஸ் விபிஎன்
இதனை அடுத்து 13 வருடங்களாக இந்தியாவில் VPN சேவைகளை செய்து வந்த Express VPN இந்தியாவில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. இதனால் அதன் பயனாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் இந்தியாவில் மேலும் பல VPN சேவைகள் புதிய விதிமுறைகளை ஏற்று கொண்டு தொடர்ந்து இருப்பதால் பயனாளர்கள் வேறு சேவைக்கு மாறிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு மாணவர்கள்
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த Express VPN சேவை பீட்டர் புச்சார்டு மற்றும் டான் போமேரான்ட்ஸ் ஆகிய இரண்டு பள்ளி மாணவர்களால் தொடங்கப்பட்டது. இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த VPN சேவை உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓஎஸ்
விண்டோஸ், மேக் என அனைத்து ஓஎஸ்களுக்கும், மொபைல் செயல்களில் உள்ள ஆண்ட்ராய்டு, ஆப்பிள் மற்றும் லினக்ஸ் ஆகியவற்றுக்கும் VPN ரயில் சேவை இந்நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்தது.
ஜூன் 27 முதல்
VPN சேவையை பயன்படுத்தும் ஆன்லைன் பயனாளர்கள் தங்களுடைய உண்மையான பெயர், முகவரி, ஐபி முகவரி ஆகிய அடையாளம் காட்டும் விவரங்களையும், தரவுகளையும் சேமிக்க வேண்டும் என மத்திய அரசு புதிய விதிமுறையை விதித்துள்ளது. இந்த புதிய விதிமுறை வரும் 27ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியேற்றம்
இதனை ஏற்றுக்கொள்ளாத Express VPN சேவை தனது சேவையை இந்தியாவில் நிறுத்தி கொள்வதாகவும் இந்தியா சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து பிளாட்பாரங்களையும் நீக்குவதாகவும் அறிவித்துள்ளது.
Express VPN to shut down servers in India:why?
Express VPN to shut down servers in India:why? | இந்தியாவில் இருந்து வெளியேறும் Express VPN: என்ன காரணம்?