இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியிலிருந்து யூரியா உர பெறுகைக்கு கடன்

பெரும்போகத்திற்குத் தேவையான யூரியா உரப் பெறுகைக்கான கடன் தொடரை இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியிடமிருந்து பெற்றுக்கொடுக்க இந்திய அரசாங்கம் உடன்பட்டுள்ளது.

இது தொடர்பாக 06.06.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

06. யூரியா உரம் பெறுகைக் கோரலுக்கான இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியிலிருந்து 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொடரைப் பெற்றுக்கொள்ளல்

2022ஃ23 பெரும்போகத்திற்குத் தேவையான யூரியா உரப் பெறுகைக்காக 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொடரை இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியிடமிருந்து பெற்றுத் தருவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமையஇ குறித்த ஒப்பந்தங்களில் கையொப்பிடுவதற்காக நிதிஇ பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.