அமெரிக்காவில் போதை மருந்து விற்றவர் வனவிலங்குகளை குணப்படுத்தும் நிபுணராக மாறியுள்ளார்.
ஸ்டாட்ஸ் என்ற பெயருடைய அந்த 51 வயது மனிதர் அனகோஸ்டியா என்ற நதியை துய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போது இயற்கையின் அற்புத சக்தியின் பால் ஈர்க்கப்பட்டு பறவைகளை காக்கும் செயலில் ஈடுபட்டார்.
இதுவே அவர் சிறந்த பறவை காப்பாளாராக உருவெடுக்க வாய்ப்பாக அமைந்தது. போதைப் பொருள் விற்பவராக சுற்றித்திரிந்த அவர் தற்போது பருந்துகளுக்கு பாதுகாவலராக திகழ்ந்து வருகிறார்.