இலங்கை அரசுக்கு அடுத்த 6 மாதங்களில் 5 பில்லியன் டாலர் நிதியுதவி தேவைப்படுகிறது என அந்த நாட்டு புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
இலங்கையில் நிலவி வரும் கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில், பல அத்தியாவசிய பொருட்களின் விலையானது பெரியளவில் உச்சம் தொட்டுள்ளது.
குறிப்பாக அரிசி, பால், காய்கறிகள், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையானது விண்ணை எட்டியுள்ளது.
ஒரே நாளில் ரூ.2.5 லட்சம் கோடி நஷ்டம்.. கண்ணீர் விடும் முதலீட்டாளர்கள்..!
தீவிர நடவடிக்கை
இதற்கிடையில் எரிபொருட்கள் விலை விண்ணை எட்டும் அளவுக்கு உச்சம் தொட்டு வருகின்றன, இதற்கிடையில் இலங்கையில் கடும் போராட்டங்கள் வெடித்தன. ஆட்சி மாற்றமே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் புதிய அரசானது சரிந்துள்ள பொருளாதாரத்தினை மேம்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
நிதி தேவை
குறிப்பாக பொருளாதாரத்தினை மேம்படுத்துதல், வேலையின்மை போக்கி வேலை வாய்ப்பினை பெருக்குதல், விலைவாசியினை கட்டுக்குள் வைத்தல், அன்னிய செலவாணியை மேம்படுத்தல் என பல சவால்கள் காத்துக் கொண்டுள்ளன. இந்த நிலையில் ஏற்கனவே நிதி நெருக்கடியினை சமாளிக்க முடியாமல் கடன் வாங்கி திணறி வரும் இலங்கை, மேலும் அடுத்த 6 மாதங்களில் 5 பில்லியன் டாலர் நிதி தேவைப்படும் என்றும் கூறியுள்ளார்.
இடைக்கால பட்ஜெட்
பொருளாதாரத்தினை மேம்படுத்துவது மட்டும் போதாது? அதனை பழைய நிலைக்கு வலிமையாக மாற்ற இடைக்கால பட்ஜெட்டினை அரசு தயார் செய்து வருகின்றது. அன்னிய செலவாணி பற்றாக்குறை காரணமாக தற்போது வரியயில் எரிபொருள், மருந்துகள் மற்றும் உரங்களுக்கு பற்றாக்குறையே நிலவி வருகின்றது. தற்போதைய நெருக்கடியான சூழலில் இறக்குமதி செய்ய முடியாத நிலையே இருந்து வருகின்றது.
7 தசாப்தங்களில் இல்லாதளவுக்கு சரிவு
இலங்கை 7 தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள நிலையில், அடுத்த 6 மாதங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு 5 பில்லியன் டாலர் தேவை. இதில் 3.3 பில்லியன் டாலர் தொகையானது எரிபொருளுக்கு தேவைப்படுகிறது.
Sri lanka needs $5 billion in next 6 months for essentials
The new Prime Minister of Sri Lanka Ranil Wickremesinghe has stated that the Sri Lankan government needs $ 5 billion in financial assistance in the next 6 months.