உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த ஹெல்த் மிக்ஸ் தான் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படுவதாகவும், ஆவினின் மில்க் ஹெல்த் மிக்ஸ் குழந்தைகளுக்கானது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.
சென்னையில் இது குறித்து பேட்டியளித்த அவர், தனியார் நிறுவனத்தின் பிரோ-பி.எல். ஹெல்த் மிக்ஸ் சந்தை விலையை விட 127 ரூபாய் குறைவாக தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்வதாக விளக்கமளித்தார்.
மேலும், நியூட்ரிசியன் கிட் வழங்கும் திட்டம் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டாலும், தற்போது முறையாக செயல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.