உள்ளாடை விளம்பரத்தில் கவர்ச்சி காட்டிய சமந்தா
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. நாக சைதன்யாவுடனான திருமண பந்தத்தை முறித்த பின் அவரது சமூக வலைத்தளப் பதிவுகளில் அதிகமான கிளாமர், கவர்ச்சி புகைப்படங்களைப் பார்க்க முடிகிறது. அது மட்டுமல்ல 'புஷ்பா' படத்தில் கவர்ச்சி ஆடை அணிந்து ஒரு பாடலுக்கு நடனமாடி ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளித்தார்.
நேற்று சமூக வலைத்தளத்தில் சமந்தா பதிவிட்ட ஒரு பதிவு சமீபத்திய அதிர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். 24 மணி நேரத்திற்குள்ளாகவே அந்தப் பதிவு 20 லட்சம் லைக்குகளை நெருங்கியுள்ளது. பெண்களின் ஆடைகளைத் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் விளம்பரப் பதிவு அது. மேல் உள்ளாடைக்கான போட்டோ ஒன்றை மிகவும் கவர்ச்சியாகப் படமெடுத்து பதிவிட்டுள்ளார் சமந்தார். அதில் அவரது பார்வை ஏக்கம் கலந்த காமப் பார்வையாக உள்ளது.
சமந்தாவின் அந்தப் பதிவிற்கு அனுஷ்கா சர்மா, ஹன்சிகா, லட்சுமி மஞ்சு, சம்யுக்தா ஹெக்டே, ருஹானி சர்மா, லட்சுமி மேனன் உள்ளிட்ட பல நடிகைகளும் லைக் செய்து கமெண்ட் பதிவிட்டுள்ளனர். பலரும் 'ஹாட்' எமோஜிக்களைப் பதிவிட்டுள்ளனர்.
சமந்தா பாலிவுட்டில் கால் பதிக்க நினைப்பதால் இப்படியெல்லாம் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுகிறார் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.