கச்சா எண்ணெய் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், WTI கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 119 டாலர்களுக்கு மேலாக வர்த்தமாகி வருகின்றது. இது கடந்த மார்ச் 2022ல் 130.50 டாலர்களை எட்டியது.
ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனையானது தொடர்ந்து வரும் நிலையில், தொடர்ந்து சப்ளை சங்கிலியில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
ஓரே நாளில் 3 வங்கி தலைவர்கள் நியமனம்.. யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவராக மணிமேகலை..!
இதற்கிடையில் ஓபெக் நாடுகள் உற்பத்தியினை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. எனினும் இப்படி ஒரு நிலையில் சவுதி அரேபியா ஜூலை மாதத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலையினை உயர்த்த போவதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில் தான் கச்சா எண்ணெய் விலையானது மேற்கொண்டு உச்சம் தொட்டு வருகின்றது.
தேவை அதிகரிக்கலாம்
இது குறித்து அபான்ஸ் குழுமத்தின் EVP & கேப்பிட்டல் மற்றும் கமாடிட்டியின் தலைமை அதிகாரியான மகேஷ் குமாரிடம் பேசினோம்.
சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் ஒரு சில கொரோனா வழக்குகளே பதிவான நிலையில், இது மேற்கொண்டு தேவையினை ஊக்குவிக்கலாம். பொருளாதார வளர்ச்சியினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி சரிவு
கோல்டுமேன் சாச்சஸ் தனது கணிப்பில் ரஷ்யாவின் உற்பத்தி விகிதம் சுருங்கி வருவது, மேற்கோண்டு விலையினை ஊக்குவிக்கலாம். இது சப்ளையில் பற்றாக்குறையை ஏற்படுத்த கூடும். இது சர்வதேச சந்தையில் விலையினை ஊக்குவிக்க கூடும். இது கோடைக் காலத்தில் தேவை அதிகரிக்கலாம். இதுவும் கச்சா எண்ணெய் விலையை ஊக்குவிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ரஷ்யாவுக்கு தடை
ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக தடை விதித்துள்ள நிலையில், இதுவும் கச்சா எண்ணெய் விலைக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இதற்கிடையில் பல்கேரியா, டென்மார்க், பின்லாந்து மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கான இயற்கை எரிவாயு ஏற்றுமதியினை ரஷ்யா தடை செய்துள்ளது. இது ரஷ்யா அதன் ஐரோப்பிய வாடிக்கையாளர்களை கட்டணமாக ரூபிளில் செலுத்த வேண்டுகோள் விடுத்தது, இதற்கு மறுப்பு தெரிவிக்கவே ரஷ்யா இப்படியொரு அதிரடியான முடிவினை எடுத்துள்ளது.
உற்பத்தி அதிகரிக்க திட்டம்
ரஷ்யாவின் இந்த நடவடிக்கையினால் நீண்ட காலத்திற்கு விலை இன்னும் நிலையானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியினை ஒரு நாளைக்கு 6,48,000 பேரல்களாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இது சமீபத்தில் ஒரு நாளைக்கு 4,32,000 பேரல்களாக இருந்தது. மே மாதத்தில் ஒரு நாளைக்கு கச்சா எண்ணெய் உற்பத்தியானது 1,30,000 பேரல்கள் உற்பத்தி அதிகரித்தது. இது 2 வருடங்களில் இல்லாத அளவுக்கு ஒரு நாளைக்கு 28.850 மில்லியன் பேரல்களை எட்டியுள்ளது.
பல்வேறு தடைகள்
மே மாதத்தில் ஓபெக் நாடுகள் உற்பத்தியினை ஒரு நாளைக்கு 2,90,000 பேரல்களாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லிபியா மற்றும் நைஜீரியாவில் சப்ளை தடைகள் அந்த இலக்கினை அடைவதை தடுத்தது.
லிபியாவின் மே மாத கச்சா எண்ணெய் உற்பத்தியானது -1,40,000 பேரல்கள் சரிந்து, 7,60,000 பேரல்களாக சரிவினைக் கண்டது. இது ஒன்றரை வருடத்தில் இல்லாத அளவுக்கு சரிவினை எட்டியது.
இருப்பு சரிவு
உலகம் முழுவதும் உள்ள கச்சா எண்ணெய் குறைந்தபட்ச இருப்பு குறைந்துள்ளது. உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் அளவு ஜூன் 3ம் தேதி நிலவரப்படி, 89.31 மில்லியன் பேரல்களாக குறைந்துள்ளது.
இது வேர்டெக்சா தரவின் படி, இது பிப்ரவரி மாதத்திற்கு பிறகு மிகக் குறைந்த அளவாகும். மே 27 அன்று 100.82 மில்லியன் bblல் இருந்து, 11% ஆக குறைந்துள்ளது. ஆக இது சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.
Experts predict that crude oil prices may rise further
Among the many factors, experts predict that the price of crude oil in the international market may rise further.