ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் மாதத்திற்கு 12 டிக்கெட்டுக்களில் இருந்து 24 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யலாம் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
ஆதார் எண்ணை இணைக்காத ஐஆர்சிடிசி கணக்கில் ஆறு டிக்கெட்டுகளில் இருந்து 12 டிக்கெட்டுக்கள் வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் இரண்டு மடங்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்து பலர் தங்கள் ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஐஆர்சிடிசி கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி என்பதை தற்போது பார்ப்போம்.
1. முதலில் ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று உங்கள் அக்கவுன்டில் லாக் இன் செய்ய வேண்டும்
2. பின்னர் முகப்பு பக்கத்தில் உள்ள மை அக்கவுன்ட் என்பதை கிளிக் செய்து அதில் லிங்க் யுவர் ஆதார் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
3. அதன் பின்னர் உங்கள் ஆதார் எண்ணில் உள்ள பெயரை சரியாக டைப் அடித்து அதன்பின் கேட்கும் விவரங்களை பதிவிட்டு, ஓடிபி ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4. சில நொடிகளில் உங்கள் மொபைலுக்கு வந்த ஓடிபி எண்ணை ஐஆர்சிடிசியில் பதிவு செய்து அதை வெரிபை செய்ய வேண்டும்.
5. அதன்பின்னர் உங்கள் KYC விவரங்களை சரிபார்த்த பின்னர் ஐஆர்சிடிசி – ஆதார் இணைப்பு நிறைவு பெறும். இந்த இணைப்பு உறுதி செய்யப்பட்டதை மெசேஜ் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் பாப்-அப் ஆக தோன்றும்
மேற்கண்ட வழிமுறையை பயன்படுத்தி ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து மாதத்திற்கு 24 டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
இனி ஆதார்-பான் எண்களை இணைக்க கட்டணம்: எவ்வளவு தெரியுமா?
How to link Aadhaar with IRCTC account
How to link Aadhaar with IRCTC account | ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி தெரியுமா?