புதுச்சேரி : கெங்கராம்பாளையம் ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் 24ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.கல்லுாரித் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். செயலாளர் சிவராம் ஆல்வா, பொருளாளர் விமல் முன்னிலை வகித்தனர்.
கடலுார் மாவட்ட கைப்பந்து சங்கச் செயலாளரும், புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியருமான அசோகன் வாழ்த்திப் பேசினார்.அவர் பேசுகையில், மாணவர்கள் நேரம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு கீழ்படிந்து எல்லா செயல்களிலும் உண்மையாக இருக்க வேண்டும். மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என குறிப்பிட்டார்.
கல்லுாரி முதல்வர் மகேந்திரன், துணை முதல்வர் மடில்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் பிரேமானந்த், கணினி அறிவியல் மற்றும் பொறியியல்துறை பேராசிரியர் மஞ்சுபாலா, இயந்திரவியல் துணை பேராசிரியர் திருமாறன் ஆகியோர் செய்திருந்தனர்.
Advertisement