இந்தியன் ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்பதை பார்த்தோம். அது மட்டுமன்றி விரைவில் மேலும் 40 புள்ளிகள் வரை வட்டி விகிதத்தை உயர்த்த போவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இதனால் கடன் வாங்குபவர்களுக்கு இனி திண்டாட்டம் தான் என்றும் ஏற்கனவே கட்டிவரும் கடனை முடிக்க அதிகமான தொகை கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் உயர் படிப்புக்கு தயாராகும் மாணவர்களுக்கும் இது சோதனையான காலமாக இருக்கப்போகிறது. கல்விக் கடனுக்கும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் மாணவர்களுக்கு குறிப்பாக வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு சிக்கலாகிவிடும்.
இன்ஜினியரிங், மேனேஜ்மென்ட் கல்வி கட்டணம் விரைவில் மாற்றம்.. எவ்வளவு தெரியுமா?
கல்விக்கடன்
இருப்பினும் ஒரு சில வங்கிகள் 7.3 சதவிகிதத்திற்கும் குறைவான வட்டி விகிதங்களை கல்வி கடனுக்காக வழங்கிவருகின்றன. அவ்வாறு குறைந்த வட்டியில் கல்விக்கடன் வழங்கும் 10 வங்கிகள் குறித்து தற்போது பார்ப்போம்.
ஐடிபிஐ
6.75 சதவீதத்தில், இந்த பொதுத்துறை வங்கி கல்விக்கடன் வழங்குகிறது. இந்த வங்கியில் ரூ.20 லட்சம் கல்விக் கடன் வாங்கினால் ஏழு ஆண்டுகள் திருப்பி செலுத்தும் மாதத்தவணை ரூ.29,942 என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ரூ.20 லட்சம் கல்விக்கடனுக்கு 6.85 சதவீதம் வட்டி விதிக்கும். ஏழு வருட கால அவகாசம் கொண்ட அத்தகைய கடனுக்கான இஎம்ஐ ரூ.30,039 ஆக இருக்கும்.
இந்தியன் வங்கி
மலிவான கல்விக் கடன்களை வழங்கும் முதல் பத்து கடன் வங்கிகளில் இந்த அரசுக்கு சொந்தமான வங்கியும் ஒன்று. இந்த வங்கி கல்விக்கடனுக்கு 6.9 சதவீத வட்டி பெறுகிறது. ரூ.20 லட்சம் கல்விக்கடன் வாங்கினால் மாதத்தவணை ரூ.30,088 ஆக இருக்கும்.
ஆந்திரா வங்கி
ஆந்திரா வங்கி, கார்ப்பரேசன் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய மூன்று வங்கிகளும் 7 சதவீத வட்டி விகிதத்தில் கல்விக்கடன் வழங்குகிறது. ரூ.20 லட்சம் கல்விக்கடன் வாங்கினால் மாதத்தவணை ரூ.30,185 ஆக இருக்கும்.
பாங்க் ஆப் பரோடா
பாங்க் ஆப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய இரண்டு முன்னணி பொதுத்துறை வங்கிகள் 7.15 சதவீத வட்டி விகிதத்தில் கல்விக்கடன் வழங்குகின்றன. இந்த வங்கியில் ரூ.20 லட்சம் கல்விக்கடன் வாங்கினால் 7 ஆண்டுகள் திருப்பிச் செலுத்த வேண்டும்
எஸ்பிஐ
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கியில் கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் 7.25 சதவீதமாக உள்ளது. ஏழு ஆண்டுகள் திருப்பிச் செலுத்தும் காலம் கொண்ட ரூ.20 லட்சம் கடனில், இஎம்ஐ ரூ.30,340 ஆக இருக்கும். அதேபோல் அரசு வங்கிகளான பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளும் எஸ்பிஐ வாங்கும் வட்டி விகிதத்தையே வாங்குகின்றன.
கனரா வங்கி
இந்த வங்கி கல்விக் கடனுக்கு 7.30 சதவீத வட்டியை பெறுகிறது. அரசுக்கு சொந்தமான வங்கியில் ரூ.20 லட்சம் கல்விக்கடனுக்கான ஒவ்வொரு மாதமும் ரூ.30,480 தவணை செலுத்த வேண்டும்.
கல்விக்கடனை பொருத்தவரை செயலாக்க கட்டணம் உள்பட வேறு எந்த கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Ten banks that offer the lowest interest rates on education loans
Ten banks that offer the lowest interest rates on education loans | கல்விக்கடனை குறைந்த வட்டியில் கொடுக்கும் 10 வங்கிகள் இவைதான்!