கேரளாவை கேட்கும் மத்திய அரசு| Dinamalar

புதுடில்லி: கேரளாவில் இருவர் ‘நோரோ வைரஸ்’ நோயால் பாதிக்கப்பட்டது தொடர்பான முழு விபரங்களை வழங்கும்படி அம்மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள விழிஞ்சம் நகரில் பள்ளிக் குழந்தைகள் இருவர் ‘நோரோ வைரஸ்’ நோயால் பாதிக்கப்பட்டதாக கடந்த வாரம் தகவல் வெளியானது.

இதையடுத்து இந்நோய் பரவல் குறித்த முழு விபரங்களையும் வழங்கும்படி மத்திய சுகாதார அமைச்சகம், கேரள கண்காணிப்பு அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.கடந்த ஆண்டு கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. வைரஸ் தாக்கத்தால், 950 பேருக்கு கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.ஒன்றரை மாதங்களுக்குப் பின் நோய் பரவல் மறைந்தது.

அசுத்தமான நீரால் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக ஆய்வில் தெரியவந்தது.இந்நிலையில் கேரளாவில் மீண்டும் நோரோ வைரஸ் பாதிப்பு தெரியவந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அது குறித்த தகவல்களை மத்திய சுகாதாரஅமைச்சகம் கோரியுள்ளது.குடல்வால் அழற்சி நோய்க்கு நோரோ வைரஸ் பாதிப்பு காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது.

கடுமையான வயிற்றுப் போக்கு, வாந்தி ஆகியவற்றுடன் நீண்ட நாள் காய்ச்சலும் இதன்அறிகுறிகளாகும். உலகளவில், ஆண்டுக்கு 68 கோடி பேர் நோரோ வைரஸ் பாதிப்பிற்கு ஆளாவதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.