டெல்லி: சர்ச்சையில் சிக்கிய பாஜகவின் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக விஎச்பி அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கருத்து தெரிவித்துள்ளார். நுபுர் சர்மாவின் விவாதத்தில் இந்து தெய்வங்கள் பற்றி அவதூறு கருத்து தெரிவிக்கப்பட்டது. இதனால் தான் பதிலுக்காக நுபுர் சர்மா சில கருத்துகளை கூறியுள்ளார். நுபுர் சர்மாவின் கருத்து சட்டவிரோதமானதா என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறினார்.