சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கருமுட்டை விற்பனை; தமிழக அரசு தீவிர விசாரணை

Arun Janardhanan

Minor raped, forced to sell her eggs to pvt hospitals; Tamil Nadu begins probe: தமிழ்நாட்டில் சிறுமி ஒருவர் தனது தாயின் ஆண் நண்பரால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவளது கருமுட்டையை (ஓசைட்டுகள், பெண் கேமட் செல்) தமிழகத்தில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு விற்க கட்டாயப்படுத்தபட்டது தொடர்பான வழக்கை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

சிறுமியின் தாயும் அவரது ஆண் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மற்றவர்களில், விற்பனைக்கு உதவியதாகக் கூறப்படும் ஒரு பெண் இடைத்தரகர் மற்றும் சிறுமியை 20 வயதுடைய பெண் என அடையாளம் காட்டும் வகையில் ஆதார் அட்டையை போலியாக உருவாக்கிய வேன் ஓட்டுநர் ஆகியோர் அடங்குவர் என்று வழக்கை விசாரிக்கும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், “நாங்கள் சில மருத்துவமனைகள் மற்றும் சில மருத்துவர்கள் மீதும் விசாரணையைத் தொடங்கியுள்ளோம்” என்று அந்த அதிகாரி கூறினார்.

மாநில சுகாதாரத் துறையின் உதவியுடன் போலீசார், 2017 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு, சிறுமி தனது கருமுட்டைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்டதைக் கண்டறிந்தனர்.

“கடந்த நான்கு ஆண்டுகளில் சிறுமி குறைந்தபட்சம் எட்டு முறை தனது கருமுட்டைகளின் சட்டவிரோத விற்பனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்,” என்று அந்த அதிகாரி கூறினார். மேலும், “சிறுமியின் அம்மாவும் கருமுட்டை விற்றுள்ளார். சிறுமி தனது தாய் மற்றும் தாயின் ஆண் நண்பருடன் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்,” என்றும் அந்த அதிகாரி கூறினார்.

அந்த சிறுமி நீண்ட காலமாக தனக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து அமைதியாக இருந்ததாகவும், ஆனால் கடந்த மாதம் “சூழ்நிலைகள் அவளை வீட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தியது” என்றும் அந்த அதிகாரி கூறினார். மேலும், “அவர் சேலத்தில் ஒரு நண்பருடன் சில நாட்கள் தங்கியிருந்தார் மற்றும் சில உறவினர்களை அணுகி, தனக்கு நேர்ந்த கொடுமைகள் மற்றும் அதிர்ச்சி விவரங்களை பகிர்ந்து கொண்டார். அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்” என்றும் அந்த அதிகாரி கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் அதிகாரிகள் குழு சிறுமியுடன் நடத்திய விரிவான விசாரணையில், பதின்ம வயதினரின் முட்டைகளை விற்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் அவரது தாயும் அவரது ஆண் நண்பரும் ரூ.20,000 பெற்றுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகராக செயல்பட்ட பெண், ஒரு விற்பனைக்கு 5,000 ரூபாய் கமிஷன் பெற்றதாக கூறப்படுகிறது.

போலீஸாரின் கூற்றுப்படி, சிறுமியின் பெற்றோர் கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்பு பிரிந்துவிட்டனர், பின்னர் சிறுமியின் தாய் குழந்தையுடன், பல ஆண்டுகளுக்கு முன்பு தனது ஆண் நண்பரின் வீட்டிற்கு குடிபெயர்ந்தார். அங்கு, அந்த ஆண் நண்பரால் சிறுமி பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக போலீசார் தெரிவித்தனர்.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது; IPC பிரிவுகள் 420, 464, 41, 506 (ii) மற்றும் ஆதார் (இலக்கு) நிதி மற்றும் பிற மானியங்கள் பலன்கள் மற்றும் சேவைகள் சட்டத்தின் பிரிவு 34 மற்றும் 35.

தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறும்போது, ​​“மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு, எல்லா கோணங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகள் சம்பந்தப்பட்டிருந்தால், உரிமம் ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கையை சந்திக்க நேரிடும்” என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதையும் படியுங்கள்: கும்மிடிப்பூண்டி அருகே பட்டியலின மக்கள் குடியிருப்புகளை சுற்றி சுவர்: திருமாவளவன் புகார்

தமிழகத்தின் மதிப்புமிக்க உறுப்பு மாற்று செயல்முறைக்கு முன்னோடியாகவும், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் தலைவராகவும் இருந்த மூத்த வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் அமலோற்பவநாதன் ஜோசப், இந்த விவகாரம், தற்போது காளான்கள் போல் முளைத்துள்ள கருவுறாமை மையங்களுக்கு நேர் விகிதாசாரமாக பார்க்கப்படலாம் என்றார்.

“இந்த மையங்கள் அனைத்தும் தங்கள் வாடிக்கையாளர்கள், கருவகம், விந்தணுக்கள், கருமுட்டைகள் ஆகியவற்றை எங்கிருந்து பெறுகின்றன, இவை அனைத்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று டாக்டர் ஜோசப் கூறினார். மேலும், “வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) சட்டம், 2021, வாடகைத் தாயின் தகுதியாக அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது. அதில், ‘இம்ப்லான்டேஷன் நாளில் 25 முதல் 35 வயதுக்குட்பட்ட திருமணமாகி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த, பெண்களைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் வாடகைத் தாயாக இருக்கக்கூடாது அல்லது அவளது கருமுட்டை அல்லது ஓசைட் அல்லது பிறவற்றை தானம் செய்யும் வாடகை தாயாக இருக்க கூடாது’ என்று கூறுகிறது. இந்த விஷயத்தில், அவர்கள் வயதைப் போலியாகக் காட்டினாலும், அவர்களால் தாய்மையை போலியாக மாற்ற முடியாது. எனவே ஒரு பெரிய கிரிமினல் தொடர்பு இருக்கலாம்,” என்றும் அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.