சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதன்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சாரவாரியம் அறிவித்துள்ளது.
தாம்பரம், கிண்டி, போரூர், அடையாறு, நீலாங்கரை, மயிலாப்பூர், கே.கே.நகர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தாம்பரம் பகுதி: பம்மல் மெயின் ரோடு, மசூரன் தெரு, பசும்பொன் நகர், ராதா நகர், புருசோத்தமன் நகர், பத்மநாபா நகர், ஸ்ரீராம் நகர், கணபதிபுரம் மெயின் ரோடு, நாகாத்தம்மன் கோயில் தெரு, கிருஷ்ணசாமி தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
கிண்டி பகுதி: ஈக்காட்டுதாங்கல், ராஜ்பவன், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, டிஜி நகர், புழுதிவாக்கம், முகலிவாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்.
போரூர் பகுதி: காவனூர், சிறுகளத்தூர், நந்தம்பாக்கம் மற்றும் அஞ்சுகம் நகர், திருமுடிவாக்கம், சிட்கோ நிறுவனத்தின் சில பகுதிகள், திருமுடிவாக்கம், மீனாட்சி நகர், சதீஷ் நகர், திருநீர்மலை மெயின் ரோடு, போலீஸ் குடியிருப்புகள், கோவூர், சீனிவாச நகர், மூகாம்பிகை நகர், மாதா நகர், தங்கம் நகர், ஜெயா நகர், காரம்பாக்கம் பிரதான சாலை, பூமாதேவி நகர், ரங்கா நகர், குன்றத்தூர் பிரதான சாலை, BHELL நகர், சத்தியநாராயணபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
அடையாறு மற்றும் நீலாங்கரை பகுதி: கற்பகவிநாயகர் நகர், நாராயணன் நகர், சௌந்தர்யா தோட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
மயிலாப்பூர் பகுதி: கர்ரம் சுபேதார் தெரு, பள்ளப்பன் தெரு மற்றும் பெசன்ட் சாலையின் ஒரு பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
கே.கே.நகர் பகுதி: சூளைமேடு, ராஜேஸ்வரி தெரு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், பஜனை கோயில் தெரு, சின்மயா நகர், நெற்குன்றம், வளசரவாக்கம், கணபதி நகர், ஆழ்வார்திருநகர், ராதா நகர், விருகம்பாக்கம், காந்தி சாலை, சாலிகிராமம், அசோக் நகர், ஜாபர்கான்பேட்டை பகுதி, எம்ஜிஆர் நகர், காமராஜர் தெரு, அழகிரி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
அம்பத்தூர் பகுதி: சரஸ்வதி நகர், காந்தி மெயின் ரோடு, ஒரகடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
பொன்னேரி, துரைநல்லூர் பகுதி: கவர்ப்பேட்டை, சோம்பட்டு, துறைநல்லூர், அவ்வூர், திருப்பலிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்.
சோத்துபெரும்பேடு பகுதி: கெருதலாபுரம், அங்காடு, திருநெலை, அருமண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்.
பராமரிப்பு பணிகள் முடிந்ததும் 2 மணிக்கு மீண்டும் மின் இணைப்பு அளிக்கப்படும் என்றும் தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“