ஜம்மு-காஷ்மீர்: டிபன் பாக்சில் வெடிகுண்டுகளை வைத்து டிரோன் மூலம் பறக்க விட்டதால் பரபரப்பு!

ஸ்ரீநகர்,

ஜம்முவில் கனாசக் என்ற இடத்தில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் (டிரோன்) நேற்று வட்டமடித்ததாக தெரிகிறது. நேற்றிரவு பாதுகாப்பு படையினர் இந்த டிரோன்கள் பறப்பதை கண்டனர். உடனே வானில் பறந்த டிரோன்களை சுட்டு வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. டிரோன் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.

அதன்பின், இரவு 11 மணியளவில் மீண்டும் அதே பகுதியில் உள்ள தயாரன் என்ற இடத்தில் மற்றொரு டிரோன் பறந்தது. அதனையும் சுட்டு வீழ்த்தினர்.

அந்த டிரோன்களுக்குள் குழந்தைகள் பயன்படுத்தும் டிபன் பாக்ஸ்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 காந்த வெடிபொருட்கள் இருந்தன. அவை வெவ்வேறு கால நேரம் குறிப்பிட்டு, வெடிக்கும்படியாக அந்த வெடிகள் அமைகப்பட்டிருந்தன.

பின் வெடிகுண்டு நிபுணர்கள் அவையனைத்தையும் செயலிழக்கச் செய்தனர். மேலும், இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.